சுடச்சுட

    

    பொறியியல் கல்லூரியில் விண்வெளி கண்காட்சி

    By ராமநாதபுரம்,  |   Published on : 18th October 2014 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியும், கன்னியாகுமரி அருகே மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ அமைப்பும் இணைந்து வெள்ளிக்கிழமை நடத்திய விண்வெளிக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் வெள்ளிக்கிழமை திறந்து வைத்து பார்வையிட்டார்.

    ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் நடந்த ஸ்பேஸ் எக்ஸ்போ-2014 எனப் பெயரிடப்பட்ட இவ்விண்வெளிக் கண்காட்சி துவக்க விழாவுக்கு கல்லூரியின் தாளாளர் டாக்டர்.பாபு.அப்துல்லா தலைமை வகித்தார். பொருளாளர் செல்லத்துரை அப்துல்லா, செயலாளர் டாக்டர்.சின்னத்துரை அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பி.மாரிமுத்து வரவேற்றார்.

    கண்காட்சியை ஆட்சியர் க.நந்தகுமார் திறந்து வைத்து பேசியது: இக்கண்காட்சியை பார்வையிடுóம் போது எனது நினைவுகள் 15 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றது. எனது நண்பர் ஒருவர் எனக்கு அப்துல்கலாம் எழுதிய அக்னிச்சிறகுகள் புத்தகத்தை பரிசாகக் கொடுத்தார். அதை ஒரே நாளில் முழுவதுமாக படித்து முடித்தேன். அந்தப் புத்தகம் தான் எனது வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

    பல்வேறு சாதனைகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் புரிந்துள்ளனர். வியக்கத்தக்க சாதனைகளை புரியும் இந்த விஞ்ஞானிகள் சிறு குக்கிராமங்களில் படித்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

    அமெரிக்காவில் உள்ள நாசா ஆய்வு மையம் ஒரு வருடத்திற்கு ஆராய்ச்சிக்காக செய்யும் செலவுத்தொகையில் 10ல் ஒரு பங்கு தான் இந்தியா விண்வெளி ஆராய்ச்சிக்காக செய்கிறது. செவ்வாய்க் கிரகத்துக்கு இந்தியா செயற்கைக் கோளை அனுப்பி உலக அளவில் சாதனை படைத்திருக்கிறது. விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடுவதை மாணவர்கள் வாழ்நாள் பணியாக எடுத்துக் கொண்டால் அதுவை இக்கண்காட்சியை கண்டு களித்த வெற்றியாக அமையும் என்றும் ஆட்சியர் க.நந்தகுமார் பேசினார்.

    விழாவில் கன்னியாகுமரி அருகே மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகத்தின் மூத்த விஞ்ஞானிகள் எஸ்.இங்கர்சால், நாகராஜன் ஆர்.எஸ்.கண்ணு ஆகியோர் கலந்து கொண்டு விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா இதுவரை செய்துள்ள சாதனைகள், இனி வரும் காலங்களில் செய்யவுள்ள ஆராய்ச்சிகள் குறித்து விளக்கம் அளித்தனர். கல்லூரி வளாகத்தில் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி குறித்த பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளின் வகைகள், செயற்கைக் கோள்களின் மாதிரி வடிவங்கள் ஆகியவற்றையும் கண்காட்சியில் வைத்திருந்தனர். கல்லூரியின் துணை முதல்வர் எம்.பெரியசாமி நன்றி கூறினார்.

    ஏராளமான மாணவ,மாணவியர் உட்பட பலரும் கண்காட்சியை பார்வையிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai