சுடச்சுட

    

    வேலம்மாள் உறைவிடப் பள்ளியில் பட்டிமன்ற விழா

    By திருப்புவனம்,  |   Published on : 18th October 2014 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகங்கை மாவட்டம், லாடனேந்தல் உண்டு உறைவிடப் பள்ளியில் மாணவர்களின் பேச்சுக் கலையை வளர்க்கும் நோக்கில் தென் தமிழக வேலம்மாள் அறக்கட்டளை பள்ளி மாணவர்களுக்கான பட்டிமன்ற விழா நடைபெற்றது.

    திருப்புவனம் அருகே உள்ள லாடனேந்தல் உண்டு உறைவிடப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு வேலாம்மாள் கல்வி அறக்கட்டளையின் தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம் தலைமை வகித்தார்.

    இவ் விழாவில் தென் தமிழகத்தில் உள்ள அனைத்து வேலம்மாள் கல்வி அறக்கட்டளை பள்ளி மாணவ,மாணவியர் கலந்து கொண்டு இன்றைய வாழ்வில் அறிவியல் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம், மருத்துவத் துறையின் பங்களிப்பு, நாட்டின் பாதுகாப்பு, மனித உரிமைகள் உள்ளிட்ட தலைப்புகளில் விவாதம் செய்தனர்.

    இப் பட்டிமன்றத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழும், தகுதி பதக்கங்களும் வழங்கப்பட்டன. மேலும், நடைபெற்ற பட்டிமன்ற விவாதத்தில் அதிக மதிப்பெண்கள் எடுத்த தேனி வேலம்மாள் வித்யாலயா மற்றும் மெட்ரிக் பள்ளிகள் முதல் பரிசுக்கான பதக்கத்தை வென்றனர்.

    இதில் அனைத்து பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ,மாணவியர் கலந்து கொண்டனர். லாடனேந்தல் உண்டு உறைவிடப் பள்ளி முதல்வர் விஜயலெட்சுமி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai