சுடச்சுட

    

    பரமக்குடி இளம் உள்ளங்கள் மஹாலில் மதுரை அஸ்வின் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் இளம் உள்ளங்கள் அமைப்பினர் சார்பில் தைராய்டு பரிசோதனை இலவச சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

    இம்முகாமுக்கு அந்த அமைப்பின் தலைவர் ஆர். பத்மநாதன் தலைமை வகித்தார். எஸ். பாலசுப்பிரமணியன், பி.மோகன், எஸ். தெட்சிணாமூர்த்தி, ஜி. முத்துராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க உறுப்பினர் வி. குணசேகரன் வரவேற்றார்.

    முகாமில் கலந்துகொண்ட 125 பேருக்கு தைராய்டு பரிசோதனை மற்றும் ரத்த பரிசோதனை, சிறுநீரக செயல்பாடு குறித்த பரிசோதனை, ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்கான எலும்புத்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டது. உடல் குறைபாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

    இப் பரிசோதனைகள் மதுரை அஸ்வின் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சிறப்பு மருத்துவர் அ. ஆனந்தகுமார் தலைமையிலும் டாக்டர் ஜெ.ஜெயமித்ரா மேற்பார்வையிலும் நடைபெற்றன.

    தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயப்பிரகாசம் ஓம் சக்திராஜூ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இளம் உள்ளங்கள் இணைச் செயலாளர் எஸ்.குணசீலன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai