சுடச்சுட

  

  முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதியோர் உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பயனாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

  ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதிக்குட்பட்ட கிராமங்களில் உதவித் தொகை பெற்றுவந்த முதியோருக்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வட்டாட்சியர் அலுவலகத்துக்கு தொடர்ந்து முதியோர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

  இதுகுறித்து மூலக்கரைபட்டி, மேலக்கன்னிசேரி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த முதியோர் உதவித்தொகை வாங்கும் பயனாளிகள் கூறுகையில் 3 மாத காலமாக உதவித்தொகை கிடைக்கவில்லை என்றனர். இதுபற்றி சமூக நல வட்டாட்சியர்

  பவானி கூறியதாவது: குறிப்பிட்ட வயது வராமல் சிலர் உதவித்தொகை பெற்று வந்துள்ளனர். இதனால் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து அவர்களின் உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை ஆய்வு செய்து அவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை ஆய்வு செய்து வருகிறோம். தகுதி உள்ள அனைவருக்கும் உதவித் தொகை கிடைக்கும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai