சுடச்சுட

    

    தேவகோட்டை நகரில் அதிமுக 43ம் ஆண்டுவிழாவை அக் கட்சியினர் கொடியேற்றி வெகு விமரிசையாக கொண்டாடினர்.

    அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா ஜாமீனில் விடுதலையானதை அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

    மேலும் வெள்ளிக்கிழமை அதிமுகவின் 43ம் ஆண்டுவிழாவை காரைக்குடி தொகுதி செயலாளர் சொர்ணலிங்கம் தலைமையில் கொண்டாடினர்.

    நிகழ்ச்சியில் அதிமுக கொடியேற்றப்பட்டு பட்டாசுகள் வெடித்து, மக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    இந்நிகழ்ச்சியில் தேவகோட்டை நகர்மன்ற துணைத் தலைவர் சுந்தரலிங்கம், நகர செயலாளர் ராமச்சந்திரன், வக்கீல் இராமநாதன், அதிமுகவைச் சேர்ந்த தனசேகரன், கமலக்கண்ணன், சேவுகன், கருப்பையா, சிங்கமுகம், மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai