சுடச்சுட

  

  தேவகோட்டையில் ஆற்றில் சுவாமிகள் நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி சனிக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

  தேவகோட்டையில் ஆற்றில் சுவாமிகள் நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி ஓவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் முதல் மற்றும் கடைசி நாள்களில் நடைபெறுவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டும் தேவகோட்டை நகர சிவன் கோயில் மீனாட்சி சுந்தரேஸ்வரர், கைலாசநாதர் நித்யகல்யாணியம்மாள் கோயில்,ரெங்கநாத பெருமாள் கோயில்,கோதண்டராமசாமி கோயில், சிதம்பர விநாயகர் கோயில், கிருஷ்ணன் கோயில், கோட்டூர் அகத்தீஸ்வரர் மற்றும் கைலாசவிநாயகர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் இருந்து சுவாமிகள் வீதி உலாவாக தேவகோட்டை மணிமுத்தாற்றை வந்து அடைந்தனர்.

  சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பின்னர் அனைத்து சுவாமிகளும் நீராடினர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் தீர்த்தம் பெற்றனர். பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று தத்தம் கோயில்களுக்கு ஊர்வலமாக திரும்பிச் சென்றனர் (படம்). இந்நிகழ்ச்சியில் தேவகோட்டை பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai