சுடச்சுட

  

  இலங்கை, இந்திய வடகிழக்கு கடல் எல்லைப் பகுதியில் கடலில் காற்றின் சுழற்சி ஏற்பட்டுள்ளது. அதனையொட்டி, பாம்பன், மண்டபம் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. அதனைத் தொடர்ந்து இரண்டு நாள்களாக இரவு பகலாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை காலையில் கடலில் சீற்றம் அதிகரித்து, மண்டபம் துறைமுக கடற்கரைப் பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவரையும் தாண்டி கடல் அலைகள் வீசி வருகின்றன.

  மேலும், அப் பகுதியில் மீனவர்களின் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai