சுடச்சுட

  

  மின் கம்பி அறுந்து பேருந்து மீது விழுந்தது: பயணிகள் தப்பினர்

  By ராமேசுவரம்,  |   Published on : 19th October 2014 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமேசுவரத்தியிலிருந்து மதுரைக்குச் சென்ற அரசுப் பேருந்து மின் கம்பத்தில் மோதியதில், கம்பி அறுந்து பேருந்து மீது விழுந்தது. இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

  ராமேசுவரத்திலிருந்து மதுரைக்கு சனிக்கிழமை காலை 9.25 மணிக்கு அரசுப் பேருந்து புறப்பட்டது. அதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இப் பேருந்து காலை 9.50 மணியளவில் மண்டபம் நகர் பகுதிக்கு வந்தது. நகர்ப் பகுதியின் குறுகலான சாலையில் சென்றபோது எதிரே ராமேசுவரம் செல்லும் மற்றொரு அரசுப் பேருந்து வந்தது. அந்தப் பேருந்துக்கு வழிவிட மதுரை செல்லும் பேருந்து ஓட்டுநர் முயன்றுள்ளார். அப்போது சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் இடித்துவிட்டது. இதில் மின் கம்பி அறுந்து பேருந்து மீது விழுந்தது. இதனால் பயணிகளுக்கு ஈர்ப்பு உணர்வு ஏற்படவே சிலர் கூச்சலிட்டனர். உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு, பயணிகள் இரும்புக் கம்பிகளை தொடாமல் இருக்கையில் அசையாமல் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதைத் தொடர்ந்து மின் வாரியத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

  அதன் பின்னர், பேருந்தின் மேல் பகுதியில் விழுந்திருந்த மின் கம்பியை மின் வாரிய ஊழியர்கள் அகற்றினர். அதன்பிறகு அப் பேருந்து மதுரைக்கு புறப்பட்டுச் சென்றது. பேருந்து நடத்துநர் முன்னெச்சரிக்கையாக பயணிகளை இறங்க வேண்டாம் என கேட்டுக் கொண்டு இருக்கையில் இருக்கும்படி கூறியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai