சுடச்சுட

    

    : ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது அதிகபட்சமாக மண்டபத்தில் 170.80மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக ஆட்சியர் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்துள்ள மழையளவு: (மி.மீட்டரில்) கமுதி-19.50, முதுகுளத்தூர்-11, பாம்பன்-72.40, பரமக்குடி-18, ராமநாதபுரம்-97.40,திருவாடானை-30.60, தொண்டி-42.20, பள்ளமோர்குளம்-28, மண்டபம்-170.80, ராமேசுவரம்-45.40,தங்கச்சி மடம்-83.20,வட்டானம்080,தீர்த்தாண்டதானம்-63,

    ஆர்.எஸ்.மங்கலம்-18,கடலாடி-3.50,வாலிநோக்கம்-8,மொத்த மழையளவு-791.சராசரி மழையளவு-49.44.மி.மீ.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த இரு நாள்களாக நல்ல மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கண்மாய்கள், ஊருணிகள் பலவும் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ராமநாதபுரம் நகரில் அரசு மருத்துவமனை சாலை, பாரதிநகர் ஆகிய பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மழை நீர் தேங்கி நின்று போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai