சுடச்சுட

  

  ராமேசுவரம் தீவு பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவில் பெய்த கன மழையால் வீடு சேதமடைந்தது. மேலும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க தாமதமாக கடலுக்குள் சென்றனர்.

  ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் தொடர்ந்து கன மழை பெய்தது. அதனையொட்டி ராமேசுவரம் எம்.கே நகர் பகுதியில் மீனவர் ராமுவின் கான்கிரிட் வீடு முழுவதும் இடிந்துவிழுந்தது. இதில் மூன்று ஆடுகள் உயிரிழந்தன. வீட்டிலிருந்த பொருள்கள் அனைத்தும் சேதமடைந்தன. சேதமடைந்த வீட்டை ராமேசுவரம் நகர் மன்றத் தலைவர் அர்சுணன் பார்வையிட்டு, வீட்டு உரிமையாளருக்கு ஆறுதல் கூறினார்.

  ராமேசுவரம் பகுதியிலிருந்து மீன்பிடிக்க கடலுக்கு செல்வதற்காக மீனவர்கள் வழக்கம்போல் சனிக்கிழமை அதிகாலையில் தயாராகி வந்தனர். இந்நிலையில் காலையில் கடலில் கடல் சீற்றம் அதிகமாகக் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் 3 மணி நேரம் தாமதமாக 450க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai