சுடச்சுட

  

  கமுதி வட்டாரத்தில் மழை நீடிப்பு விவசாய வேலைகள் மும்முரம்

  By கமுதி,  |   Published on : 20th October 2014 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கமுதி, முதுகுளத்தூர், கடலாடி தாலுகாக்களில் மழை நீடித்து வருகிறது. இதனால் விவசாய வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

  ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கமுதி, முதுகுளத்தூர், கடலாடியில் பெய்த மழை அளவு(மி.மீ) விவரம் வருமாறு:

  கமுதியில் 14-ஆம் தேதி-64.7, 15-ஆம் தேதி-73.6, 16-ஆம் தேதி-24.76, 17-ஆம் தேதி-19.5. 18-ஆம் தேதி -16.6, கடலாடியில் 15-ஆம் தேதி-10, 16-ஆம் தேதி-5.4, 17-ஆம் தேதி-3.5, 18-ஆம் தேதி-37.1. வாலிநோக்கத்தில் 11-ஆம் தேதி-15.4, 16-ஆம் தேதி-4.4, 17-ஆம் தேதி-8, 18-ஆம் தேதி-45.8 முதுகுளத்தூரில் 16-

  ஆம் தேதி-15, 17-ஆம் தேதி-8, 18-ஆம் தேதி-20 சனிக்கிழமை இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்வதையொட்டி விவசாயப்பணிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. ஆனாலும் கண்மாய்களில் தண்ணீர் பெருகும் அளவு மழை பெய்யாததால், விவசாயிகள் கவலையில் உள்ளனர். தற்போது பெய்து வரும் மழையை நம்பி விவசாயத்தை துவக்கினாலும், தொடர்ந்து மழை பெய்து கண்மாய்கள் நிரம்பினால்தான் விளைச்சல் பார்க்க முடியும் என்றனர். மழை காரணமாக கிராமப்புற பழைய ரோடுகள அரிக்கப்பட்டும், சகதி நிறைந்தும் காணப்படுகின்றன. வாரச்சந்தை வியாபாரமும், கடைகளில் தீபாவளி வியாபாரமும் பாதிப்பு அடைந்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai