Enable Javscript for better performance
கூடைப்பந்தாட்ட போட்டி: ஆயிரவைசிய பள்ளி முதலிடம்- Dinamani

சுடச்சுட

    

    கூடைப்பந்தாட்ட போட்டி: ஆயிரவைசிய பள்ளி முதலிடம்

    By பரமக்குடி  |   Published on : 20th October 2014 12:23 AM  |   அ+அ அ-   |    |  

    பரமக்குடி ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெற்ற கூடைப்பந்தாட்ட போட்டியில் 14,17 மற்றும் 19 வயது ஆகிய 3 பிரிவுகளிலும் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றிபெற்ற மாணவர்களை பள்ளியின் சார்பில் சனிக்கிழமை பாராட்டி கெüரவித்தனர்.

    பரமக்குடி ஆர்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் 14 வயதுக்குட்பட்டோர், 17 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் என 3 பிரிவுகளாக நடைபெற்றது. இம் மூன்று பிரிவுகளிலும் அப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று மண்டல அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.

    சாதனை படைத்த வீரர்களையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் நாகசாமி, அமல் இருதயடெய்சி, சரவணக்குமார் ஆகியோரை பள்ளியின் சார்பில் பாராட்டி கெüரவித்தனர்.

    இந்நிகழ்ச்சிக்கு ஆயிரவைசிய சபைத் தலைவர் எஸ். பாலுச்சாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் எஸ். ராமன் செட்டியார், என். பிரகாசம், பள்ளிச் செயலர் எஸ்.கே.பி. இளங்கோ, சபைப் பொருளாளர் ஏ.ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் செ.சந்தியாகு வரவேற்றார்.

    நிர்வாக உறுப்பினர்கள் ஆர். மணிவாசகன், ஏ.ராமமூர்த்தி, லோகநாதன் கல்விக்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், ச.பூபாலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். உடற்கல்வி இயக்குநர் வசந்தா நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai