சுடச்சுட

  

  ராமநாதபுரத்தில் சர்வதேச ஓசோன் தின விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் வெள்ளிக்கிழமை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

  தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை,ராமநாதபுரம் கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஆகியனவற்றின் சார்பாக சர்வதேச ஓசோன் தின விழிப்புணர்வுப் பேரணி, சுற்றுச்சூழல் கருத்தரங்கம், மாதிரிக் கண்காட்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பட்டிமன்றம் நடைபெற்றன.

  அரண்மனை வாயிலில் பேரணியை மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி சிகில்ராஜ வீதி வழியாக வந்து ராஜா தினகர் ஆர்.சி. உயர்நிலைப்பள்ளியில் வந்து நிறைவு பெற்றது. பேரணியில் சுமார் 30க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 1500 மாணவ,மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.ஜெயக்கண்ணு, மாவட்டக் கல்வி அலுவலர் சாந்தி,மாவட்டத் தொடக்க கல்வி அலுவலர் ஜெசிந்தா, இன்னர்வீல் சங்கச் செயலர் கவிதா செந்தில்குமார், தொழிலதிபர் ரமேஷ்பாபு, செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி பொருளாளர் டாக்டர்.பாபு அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் நடந்த கருத்தரங்கிற்கு மாவட்ட வன அலுவலர் எம்.பிச்சை தலைமை வகித்தார். ராஜா தினகர் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அருள்சாமி மற்றும் சதானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஏ.பெர்னாடிட் வரவேற்று பேசினார்.

  பள்ளியில் சுற்றுச்சூழல் தொடர்பான கண்காட்சியும்,மாணவ,மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

  நிறைவாக பசுமை பாரத இயக்கத்தின் தலைவர் தீனதயாளன் தலைமையில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு அவசியமானது சிந்தனையாசெயல்பாடா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. விழாவில் 12 சிறந்த பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்களுக்கு கேடயமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன. ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியப் பொறுப்பாளர் கருணாகரன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai