சுடச்சுட

  

  கமுதி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் பால் வியாபாரி சனிக்கிழமை இறந்தார்.

  அபிராமம் காவல் நிலைய சரகம் மணலூரைச் சேர்ந்தவர் மணி மகன் மூக்கூரான் (28). பால் வியாபாரி. திருமணமாகி கலா என்ற மனைவியும், 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

  ஊரில் இருந்து மூக்கூரான், தனது இருசக்கர வாகனத்தில் பால் கேனை எடுத்துக்கொண்டு அபிராமத்துக்கு போய்க் கொண்டிருந்தார்.

  மேலக்கன்னிசேரி விலக்குச்சாலை அருகே சென்றபோது, எதிரே வேகமாக வந்த தனியார் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மூக்கூரானை கமுதி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பயனின்றி அவர் இறந்தார்.

  விபத்து குறித்து அபிராமம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. காவல் ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் லட்சுமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, மூக்கூரான் சடலத்தைக் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

  தலைமறைவான பேருந்து ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai