சுடச்சுட

  

  ராமநாதபுரத்தில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.

  ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை பெய்த மழையளவு மி.மீட்டரில்):

  கமுதி-14.60,முதுகுளத்தூர்-20,பாம்பன்-10.90,பரமக்குடி- 24.20, ராமநாதபுரம்-93.20, திருவாடானை-36, தொண்டி-66.50, பள்ளமோர்குளம்-32, மண்டபம்-14.60,ராமேசுவரம்-20.20, தங்கச்சி மடம்-15.20, வட்டாணம்-65, தீர்த்தாண்டதானம்-66, ஆர்.எஸ்.மங்கலம்-65, கடலாடி-57.10, வாலிநோக்கம்-45.80, மொத்த மழையளவு-646.30.சராசரி மழையளவு-40.39.

  மாவட்டத்திலேயே ராமநாதபுரம் நகரில் தான் அதிகமான மழை பெய்துள்ளதாக பதிவாகியுள்ளது. தொடர்ந்து பலத்த மழை பெய்தாலும் இரவு நேரங்களில் தான் பெரும்பாலும் பெய்வதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை. தீபாவளியை முன்னிட்டு வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்மழை காரணமாக விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  ராமநாதபுரம் நகரைப் பொறுத்தவரை பிரதான சாலைகளாக விழங்கும் மதுரை-மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் பாரதிநகர், அரசு மருத்துவமனைப் பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்று போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது.

  ராமநாதபுரத்தில் சாலைத்தெரு, எஸ்.எம்.அக்ரஹாரம், தேவிபட்டினம் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் மழையின் காரணமாக மிகவும் மோசமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகின்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai