சுடச்சுட

    

    தொண்டி பகுதியில் மீன்வரத்து அதிகரித்திருப்பதால் விலை குறைந்துள்ளது. திருவாடானை தாலுகா தொண்டி, நம்புதாளை, முள்ளிமுனை, காரங்காடு, சோழியக்குடி கடல் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்து வருவதால் கடலில் மீனவர்களுக்கு அதிக மீன் கிடைக்கிறது. இதனால் மீன் விலை குறைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிதனர். இது குறித்து நம்புதாளையை சேர்ந்த மீனவர் குழந்தைநாதன் கூறுகையில், தற்போது கடலில் மழை பெய்து குளிர்ச்சியாக இருப்பதால், ஆழ்கடலில் உள்ள மீன்கள் மேல்மட்டத்துக்கு வருவதால் அதிக மீன்கள் கிடைக்கின்றன. இதனால் சந்தையில் மீன் விலை குறைந்துள்ளது. ரூ.200க்கு விற்ற விலை மீன் ரூ.150க்கும், நகரை ரூ.150க்கு விற்றது ரூ.100 விற்பனையானது, நண்டு ரூ.300க்கு விற்றது ரூ.250க்கு விற்பனை ஆனது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai