சுடச்சுட

  

  கமுதி ஸ்ரீராமானுஜர் மடாலயத்தில் மகேஸ்வரர் பூஜை மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்றது.

  கமுதி கெüரவ செட்டியார்கள் உறவின்முறைக்கு பாத்தியமான ராமானுஜர் மடாலயத்தில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்ரீமகேஸ்வரர் பூஜை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் மகேஸ்வரர் பூஜை உற்சவமும், சமபந்தி விருந்தும் நடைபெற்றன.

  உற்சவத்தை முன்னிட்டு அன்னக்குவியல் அமைத்து, அதன் நடுவில் பெரிய நாமமிட்டு, அலங்கார தீப ஆராதனை பூஜையும், ஸ்ரீராமானுஜ்ர் மடாலயத்தில் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. பின்னர் சமபந்தி விருந்து நடைபெற்றது.

  விருந்தில் தலித் சமூகத்தினர் சாப்பிட்ட இலைகளை கௌரவ செட்டியார் சமூகத்தவர்கள் அகற்றியது குறிப்பிடத்தக்கது. மகேஸ்வரர் பூஜை உற்சவம் மற்றும் சமபந்தி விருந்து ஏற்பாடுளை டிரஸ்டி ஆர்.கண்ணன் மற்றும் டிரஸ்டிகள், உற்சவக் குழுவினர், இளைஞர் அணியினர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai