சுடச்சுட

  

  பரமக்குடி காந்திசிலை முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  கட்சியின் நகர் செயலர் என்.எஸ்.பெருமாள் தலைமை வகித்தார். கைத்தறி மாநில செயலர் எஸ்.பி.ராதா, விவசாய சங்க மாவட்ட செயலர் கே.சுப்பிரமணியன், தலைவர் கே.ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலர் என்.கே.ராஜன் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் தொடர்ந்து அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை உயர்ந்துகொண்டே போவதை கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்வசம் விற்பதை கைவிடக் கோரியும், வளர்ச்சி வணிகம் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சாதகமாக தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்துவதை கண்டித்தும் கண்டன உரையாற்றினார். அக்கட்சியைச் சேர்ந்த 17 பெண்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

  இதில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஞா.காசி, எம்.பி.ருக்மாங்கதன், கடலாடி தாலுகா செயலர் ஆர்.கருணாநிதி, நகர் துணைச்செயலர்கள் கே.ஆர்.சுப்பிரமணியன், என்.வெங்கடசாமிராஜூ உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai