சுடச்சுட

    

    காற்றழுத்தத் தாழ்வு நிலை: மீன் பிடிக்கச் செல்ல அனுமதி மறுப்பு

    By ராமேசுவரம்,  |   Published on : 21st October 2014 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரம் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால், மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல மீன்வளத் துறை அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை.

    வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானதையொட்டி பாம்பன், ராமேசுவரம் பகுதிகளில் கடந்த நான்கு நாள்களாக பலத்த காற்று வீசி வருகிறது.

    பாம்பன், ராமேசுவரம் பகுதிகலிருந்து 1000-க்கும் மேற்பட்ட படகுகளில் 5000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வாரத்தில் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் கடலுக்குச் செல்வது வழக்கம். ஆனால், காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, திங்கள்கிழமை காலையில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. கடல் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால், மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai