சுடச்சுட

  

  காவல்நிலையத்தில் இளைஞர் கொலை:மனித உரிமைகள் அமைப்பு ஆர்ப்பாட்டம்

  By ராமநாதபுரம்,  |   Published on : 21st October 2014 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மனித உரிமைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  ராமநாதபுரம் சந்தைத் திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் ஆர்.டி.ரகுநாதன் தலைமை வகித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஏ.வருசை முகம்மது, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் என்.கே.ராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.கலையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  ஆர்ப்பாட்டத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநிலச் செயலர் அப்துல்காதர், தமிழர் தேசிய முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் வழக்குரைஞர் சி.பசுமலை, மனித உரிமைகள் பாதுகாப்புக் கூட்டமைப்புச் செயலர் அ.அப்துல்ஜமீல், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகி ஷாஜகான் உள்ளிட்டோர் பேசினர்.

  ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச் செயலர் கனி அமுதன், நாம் தமிழர் கட்சி மாணவரணி மாவட்டச் செயலர் வெங்குளம்

  ராஜூ, புதிய தமிழகம் மாவட்ட செயலர் அகமது ஜலீல், பெரியார் பேரவைத் தலைவர் க.நாகேசுவரன், தமிழ்ப்புலிகள் அமைப்பின் கொள்கை பரப்புச் செயலர் தமிழ் முருகன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். கொட்டும் மழையிலும் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai