சுடச்சுட

  

  சாவில் சந்தேகம்: இளைஞரின் சடலம் தோண்டியெடுப்பு

  By ராமநாதபுரம்,  |   Published on : 21st October 2014 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருப்புல்லாணி அருகே கிராமத்தில் புதைக்கப்பட்ட இடத்தில் இளைஞரின் சடலம் அதிகாரிகள் முன்னிலையில் திங்கள்கிழமை தோண்டி எடுக்கப்பட்டது.

  திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வண்ணான்குண்டு கிராமத்தில் வசிக்கும் காசிம் மகன் முகம்மது அலி ஜின்னா(20). கோழி இறைச்சிக் கடையில் வேலை செய்த இவர் கடந்த 12 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக திருப்புல்லாணி போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

  இந்நிலையில் இவரது சாவில் மர்மம் இருப்பதாக முகம்மது அலி ஜின்னாவின்

  பெரியப்பா மகன் அனிஸ் என்பவர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவரது உடலைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

  இதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை ராமநாதபுரம் வட்டாட்சியர் சுகுமார்,திருப்புல்லாணி சப்-இன்ஸ்பெக்டர் ஜேசுதாஸ் ஆகியோர் முன்னிலையில் ஜின்னாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அங்கேயே பிரேத பரிசோதனையும் செய்யப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai