சுடச்சுட

  

  தப்பாட்டக்கலைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

  By ராமநாதபுரம்  |   Published on : 21st October 2014 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமநாதபுரம் மாவட்டத்தில் தப்பாட்டக்கலைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு திங்கள்கிழமை நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

  தப்பாட்டக் கலைக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும்,திருப்புல்லாணி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலருமான வி.ராஜேந்திரன் தலைமையில் ஏராளமான தப்பாட்டக் கலைஞர்கள் ஆட்சியர் க.நந்தகுமாரை சந்தித்து கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பது:

  நாங்கள் காட்டு நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். வேட்டையாடிப் பிழைப்பதே எங்கள் குலத்தொழில். வேட்டையாடுவது சட்ட விரோதமான செயல் என ஆகிவிட்டதால் அத்தொழிலைக் கைவிட்டு கடந்த 5 வருடமாக பாரம்பரியம் மிக்க தப்பாட்டக்கலையை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறோம்.

  இந்நிலையில் அண்மைக் காலங்களாக எந்த விழாக்களுக்கும் தப்பாட்டம் அடிக்கக் கூடாது என காவல்துறை அதிகாரிகள் கூறி வருகிறார்கள்.

  பாரம்பரியம் மிக்க இக்கலைக்கு பிற மாவட்டங்களில் தடை இல்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தப்பாட்டக் கலைஞர்கள் மிகுந்த வறுமையில் இருக்கிறோம்.

  எங்களின் நிலையை கருத்தில் கொண்டு இக்கலைக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்றும் அக்கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

  கடந்த திங்கள்கிழமை தப்பாட்டக் கலைஞர் நிலாச்செல்வன் தலைமையில் ஏராளமான தப்பாட்டக் கலைஞர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்ததும் குறிப்பிடத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai