சுடச்சுட

    

    துபையில் ராமநாதபுரம் இளைஞர் கொலை:உடலை கொண்டு வரக் கோரி மனு

    By ராமநாதபுரம்  |   Published on : 21st October 2014 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    துபையில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட ராமநாதபுரம் இளைஞரின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் திங்கள்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருப்பாலைக்குடி அருகே பழங்காக்கோட்டை தெருவைச் சேர்ந்த கார்மேகம் மகன் கணேசன் (27). 13 மாதங்களுக்கு முன்பு துபை நாட்டில் அஜ்மான் என்ற இடத்தில் உள்ள

    இ.டி.ஏ.ஸ்டார் என்ற தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராகச் சேர்ந்தார். இம் மாதம் 19 ஆம் தேதி பணியில் இருந்தபோது மர்ம நபர்களால் தாக்கப்பட்டு, கணேசன் உயிரிழந்து விட்டதாக சொந்த ஊருக்கு தகவல் வந்தது.

    அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர நடவடிக்கை வேண்டும் என ஆட்சியரிடம் திங்கள்கிழமை கார்மேகம் மனு அளித்துள்ளார்.

    மனுவில் தெரிவித்திருப்பது: எனக்கு 3 மகள்கள். ஒரே மகன் கணேசன். நான் தள்ளுவண்டியில் வடை சுட்டு விற்பனை செய்து வருகிறேன். நானும் என் மனைவியும் மாற்றுத் திறனாளிகள். குடும்ப வறுமை காரணமாக துபைக்கு பாதுகாவலர் வேலைக்கு சென்ற என் மகனை மர்ம நபர்கள் கொலை செய்து விட்டதாக தகவல் வந்துள்ளது. அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர வேண்டும், குடும்ப நிலைமையைக் கருத்தில் கொண்டு போதுமான நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கார்மேகம் குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai