சுடச்சுட

    

    கமுதியில் மாடியில் விளையாடிய 5 வயது சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

    கமுதி-முத்துமாரி நகர் குடியிருப்பைச் சேர்ந்தவர் காளீஸ்வரன். இவர் ஓய்வுபெற்ற வரு வாய்த் துறை ஊழியர். இவரது பேரன் மாசாணமுத்து (5). எல்.கே.ஜி. படித்து வந்தான். ஞாயிற்றுக்கிழமை மாடியில் மாசாணமுத்து விளையாடியுள்ளான். அப்போது குழாயில் மின் கசிவு இருந்துள்ளது. குழாயைப் பிடித்ததில் மாசாணமுத்து மீது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்துள்ளார்.

    மாசாணமுத்துவை கமுதி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிறுவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். சம்பவம் குறித்து கமுதி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சிறுவனின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வருவாய் ஆய்வாளர் சுந்தரராஜன், கிராம நிர்வாக அலுவலர் முத்துக்கருப்பன் ஆகியோர் அளித்த அறிக்கையையொட்டி, வட்டாட்சியர் பி.நாகநாதன் விசாரணை நடத்தினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai