சுடச்சுட

  

  அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வலியுறுத்தல்

  By DN  |   Published on : 22nd October 2014 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பரமக்குடி ஆயிரவைசிய மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கூட்டம் நடைபெற்றது.

   இக்கூட்டத்துக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.ஜெயக்கண்ணு தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் சாந்தி, பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் வி.பழனியாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமையாசிரியர் செ.சந்தியாகு வரவேற்றார்.

   தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் பேசியதாவது: மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்கள் அரசு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற தலைமையாசிரியர்கள் கடுமையான முயற்சி மேற்கொள்ள வேண்டும். மாநிலத்தில் முதல் மூன்று இடங்களுக்குள் ராமநாதபுரம் மாவட்டம் இடம் பெற வேண்டும்.

   இதனை அடிப்படையாகக் கொண்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் தலைமையாசிரியர்கள் மற்றும் பாட ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து மெல்ல கற்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற முழு பயிற்சி அளிக்க வேண்டும். காலாண்டுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் தேர்ச்சி பெற எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

     அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நவம்பர் 7-ஆம் தேதி மாவட்ட அளவில் நடைபெற உள்ள அறிவியல் கண்காட்சியில் இடம்பெறும் வகையில் மாணவர்களை ஊக்குவித்து, சிறந்த அறிவியல் படைப்புகளை கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர் பேசினார்.

   இதில் பள்ளித்துணை ஆய்வாளர் லோகமுருகன், ஆனந்த், கல்வித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயசந்திரன், வே.திருநீலகண்டபூபதி, சுற்றுச்சூழல் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமார் மற்றும் 183 தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai