சுடச்சுட

    

    ஆய்வக உதவியாளர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை

    By DN  |   Published on : 22nd October 2014 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை செய்யப்பட இருப்பதாகவும், தகுதியானவர்கள் வியாழக்கிழமை(அக்.23) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து பரிந்துரை விபரங்களை தெரிந்து கொள்ளுமாறும் ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு கல்வித்தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், வயது வரம்பு கடந்த 1.7.2014 ஆம் தேதியன்று ஆதிதிராவிடர், பழங்குடியினர் வயது 18 முதல் 35வரை, பிற்பட்ட, மிகவும் பிற்பட்டோர் வயது 18 முதல் 32, பொதுப் போட்டியாளராக இருந்தால் வயது 18 முதல் 30 ஆம் தேதி வரை இருக்க வேண்டும். வயது வரம்பில் அரசு விதிமுறைகளின்படி தளர்வு உண்டு.

    உத்தேச பதிவு மூப்பு அடிப்படையில் பெண்களில் முன்னுரிமையுள்ளவர்களில் ஆதரவற்ற விதவைகள் (பதிவு மூப்பு தேதி அடைப்புக்குறிக்குள்) ஆதிதிராவிட அருந்ததியினர்,பழங்குடியினர்,பிற்பட்டோர்களில் முஸ்லிம் ஆதரவற்ற விதவை(அனைவரும்)

    ஆதரவற்ற விதவைகளில் ஆதிதிராவிட வகுப்பினர்(3.7.2000), மிகவும் பிற்பட்ட வகுப்பினர்(27.11.2006), பிற்பட்ட வகுப்பினர் (30.6.2000), பொதுப்போட்டியாளர்(20.2.2006), பெண்களில் முன்னுரிமையற்றவர்களாக இருந்தால் ஆதிதிராவிட வகுப்பினர்- பெண்கள்(10.1.1986), மிகவும் பிற்பட்ட வகுப்பினர்(9.7.1985), பிற்பட்ட வகுப்பினர்(8.7.1982), பொதுப்போட்டியாளர்(31.1.1983), மாற்றுத்திறனாளிகளில் பெண்களாக இருந்தால் ஆதிதிராவிட வகுப்பினர்(6.3.1995), மிகவும் பிற்பட்ட வகுப்பினர் (13.6.1994), பிற்பட்ட வகுப்பினர்(19.6.1989), பொதுப்போட்டியாளர்(31.12.1990), ஆண்கள் மற்றும் பெண்களில் முன்னுரிமையற்றவர்களாக இருந்து அவர்கள் பொதுப்போட்டியாளராக இருந்தால் ஆதிதிராவிட வகுப்பினர் அருந்ததியர்(12.7.1985), ஆதிதிராவிடர்(13.7.1983), மிகவும் பிற்பட்ட வகுப்பினர்(11.7.1984), பிற்பட்ட வகுப்பினர்(1.7.1982), பொதுப்போட்டியாளர்

    (31.12.1982), ஆண்கள் மற்றும் பெண்களாக இருந்து மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் ஆதிதிராவிடர்களில் அருந்ததியர் (25.6.1992), ஆதிதிராவிடர்(25.6.1990), மிகவும் பிற்பட்ட வகுப்பினர்(24.6.1992), பிற்பட்ட வகுப்பினர்(19.6.1989), பொதுப் போட்டியாளர்(31.7.1991).

    இத்தகுதிகளை உடையோர் ஆய்வக உதவியாளர் பணிக்கு பரிந்துரை செய்யப்பட இருப்பதால் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வியாழக்கிழமை (அக்.23) அனைத்து சான்றுகளுடனும் நேரில் வந்து பரிந்துரை விபரத்தினை தெரிந்து கொள்ளுமாறும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai