சுடச்சுட

  

  பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பரமக்குடி கல்வி மாவட்ட இளம் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கு மூன்றுநாள் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது.

  மாவட்ட செஞ்சிலுவைச் சங்கச் செயலர் எம்.ராக்லாண்ட்மகரம் தலைமை வகித்து, கொடியை ஏற்றினார். பள்ளி முதல்வர் பரிமளம் டி.ஆண்டனி முன்னிலை வகித்தார். கல்வி மாவட்ட ஜே.ஆர்.சி. கன்வீனர் செ.அலெக்ஸ் வரவேற்றார். கருத்தாளர்கள் செல்வக்குமார், துரைமாணிக்கம், சுரேஷ் ஆகியோர் பேரிடர் மேலாண்மை, முதலுதவி பற்றிய கருத்துக்களை வழங்கினார்.

  இரண்டாம்நாள் முகாமுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.ஜெயக்கண்ணு தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் வி.பழனியாண்டி முன்னிலை வகித்தார். பள்ளிச் செயலர் டாக்டர் எஸ்.ராமதாஸ், பள்ளித் துணை ஆய்வாளர்கள் லோகமுருகன், எம்.ஆனந்த் வாழ்த்துரை வழங்கினர்.

  புனிதசவேரியார் குளுனி உயர்நிலைப் பள்ளி ஜே.ஆர்.சி. கவுன்சிலர் ஜெ.பெஞ்சமின் பிரபாகர் வரவேற்றார்.

   மூன்றாம்நாள் முகாமுக்கு முன்னாள் ஜே.ஆர்.சி.கன்வீனர் ஏ.பர்த்தலோமியூ தலைமை வகித்தார். முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி ஜே.ஆர்.சி. கவுன்சிலர் ஜி.பரமேஸ்வரன் வரவேற்றார்.

   மூன்றுநாள் முகாமில் கலந்துகொண்ட 197 மாணவர்களுக்கும், கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai