சுடச்சுட

  

  மின்கம்பி அறுந்து விழுந்து விபரீதம்: தலைதீபாவளிக்கு வந்த புது மாப்பிள்ளை, மாமனார் சாவு

  By DN  |   Published on : 22nd October 2014 03:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமேசுவரத்தில் மின் கம்பத்திலிருந்து மின்கம்பி அறுந்து விழுந்ததில், தலை தீபாவளிக்கு வந்த புது மாப்பிள்ளை, மாமனார் இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

  ராமேசுவரம் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த மீனவர் சிதம்பரம் (46). இவரின் மகள் கவிதாவுக்கும், விருதுநகர் பகுதியைச் சேர்ந்த முருகன் (26) என்பவருக்கும் 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

  இந்நிலையில், சென்னையில் வசித்துவந்த முருகன் தம்பதி தலைதீபாவளிக்காக ராமேசுவரம் வந்தனர்.

  திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு முருகனும், மாமனார் சிதம்பரமும் ராமேசுவரம் கடைத்தெருவுக்குச் சென்று பட்டாசுகள் வாங்கிக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

  அப்போது சாலையோர மின்கம்பத்திலிருந்து, மின்கம்பி அறுந்து இருவர் மீதும் விழுந்தது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

  ராமேசுவரம் நகர் போலீஸார் சென்று சடலங்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  ரூ.1 லட்சம் நிவாரணத் தொகை: இந்நிலையில், இருவர் குடும்பத்துக்கும் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில், அவர்களது குடும்பத்தினரிடம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், நிவாரணத் தொகைக்கான காசோலையை ராமேசுவரம் வட்டாட்சியர் ஜீவரேகா, துணை வட்டாட்சியர் அப்துல் ஜபார், ராமேசுவரம் நகர்மன்றத் தலைவர் அர்ச்சுனன் ஆகியோர் வழங்கி ஆறுதல் கூறினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai