சுடச்சுட

  

  ராமநாதபுரம் நகர் முழுவதிலும் அக்.25 ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை அனைத்துப் பள்ளிகளின் மாணவ, மாணவியர்களும் இணைந்து தூய்மைப்பணி செய்ய முடிவு செய்திருப்பதாக மெட்ரிக் பள்ளி கல்வி ஆலோசகர் அ.சங்கரலிங்கம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

           ராமநாதபுரம் நேஷனல் அகாதெமி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி சார்பில் சுத்தமான ராமநாதபுரம் என்ற திட்டத்தை துவக்குவது தொடர்பான வாகன விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டது. பேரணியை ஆட்சியர் அவரது இல்லத்திலிருந்து துவக்கி வைத்து அப்பள்ளி மாணவ, மாணவியர்களோடு குழுப் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

  அதன்பின் ராமநாதபுரம் நேஷனல் அகாதெமி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி கல்வி ஆலோசகர் அ.சங்கரலிங்கம் கூறியதாவது:  ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமாரை அவரது இல்லத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் ராமநாதபுரம் நகரிலுள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவியர்களும் வரும் 25 ஆம் தேதி சனிக்கிழமை காலையில் 10 மணி முதல் 12 மணி வரை நகரில் உள்ள அனைத்து குப்பைகளையும் எடுத்து சுத்தம் செய்ய உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டனர். ஆட்சியரும் இதற்கு சம்மதம் தெரிவித்து அவரும் 25 ஆம் தேதி நிகழ்வில் பங்கேற்பதாக தெரிவித்துள்ளார்.

  மேலும் அன்றைய தினம் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டது பற்றிய புகைப்படங்களை பள்ளி முகவரிக்கு அனுப்பினால் அவை பதிவிறக்கம் செய்யப்படும். இந்த இணையதளத்தை அனைவரும் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அ.சங்கரலிங்கம் தெரிவித்தார்.

   இந்நிகழ்வில் ராமநாதபுரம் ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநர் டாக்டர்.சின்னத்துரை அப்துல்லா, தலைவர் நானா என்ற நாகரெத்தினம், செயலர் சரவணன், முன்னாள் தலைவர்கள் சண்முகராஜேஸ்வரன் மற்றும் நேஷனல் அகாதெமி மெட்ரிக் பள்ளி தாளாளர் டாக்டர்.செய்யது அப்துல்லா, முதல்வர் ராஜமுத்து, ஆசிரியர் கேசவன் உள்ளிட்ட ஆசிரியர்களும் உடன் இருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai