சுடச்சுட

  

  ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் ஊழியர் விரோதப் போக்கினை எதிர்கொள்ளவும், உரிமைகளை மீட்டு எடுக்கவும், பொதுவான பிரச்னைகளில் இணைந்து செயல்படவும் வருவாய்த்துறை சார்ந்த 7 சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

  தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம்,தமிழ்நாடு நில அளவை ஒன்றிப்பு, தமிழ்நாடு நில அளவை கணிக வரைவாளர் சங்கம், தமிழ்நாடு நில அளவைத்துறை நிர்வாக பணியாளர் சங்கம், தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்கம், தமிழ்நாடு நில அளவைத்துறை புல உதவியாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

  இக்கூட்டமைப்பில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ளது. இத்தீர்மானங்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் மேல் நடவடிக்கைகளை தொடருவது என தீர்மானிக்கப்பட்டிருப்பதாக வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலர் கே.ஏ.தமீம்ராஜா தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai