சுடச்சுட

  

  அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள் இருப்பில் உள்ளன

  By DN  |   Published on : 24th October 2014 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனை உள்பட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சல் என வருவோருக்கு வசதியாக போதுமான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக நலப்பணிகள் துறையின் மாவட்ட இணை இயக்குநர் எஸ்.எம்.ரவி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

   இது குறித்து அவர் மேலும் கூறியது..

  வடகிழக்குப் பருவமழை தொடங்கியிருப்பதால் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற நோய்கள் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து ஆட்சியரும் போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

  ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனை உட்பட அனைத்து மருத்துவமனைகளிலும் காய்ச்சல் என வருவோருக்கு வசதியாக கொசுவலைகள் மற்றும் தரமான மருந்துகள் ஆகியன போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

              ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் இருந்த ஆய்வுக்கூடம் புதுப்பிக்கப்பட்டு அதிநவீன ஆய்வுக் கூடமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கூடம் இம்மாதம் 21 ஆம் தேதி முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக புதிய கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

  பொதுமக்கள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனைக்கு வருவோருக்கு அவசரச் சிகிச்சையளிக்க வசதியாக, தனியாக தீக்காய சிகிச்சைப் பிரிவும் துவக்கப்பட்டுள்ளது.

  சிக்சைக்கும் போதுமான, தரமான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பேட்டியின் போது ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, நிலைய மருத்துவ அலுவலர் சகாய ஸ்டீபன்ராஜ் ஆகியோரும் உடன் இருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai