சுடச்சுட

  

  இளைஞரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாக, தேவிபட்டினம் ஊராட்சி மன்றத் தலைவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

          ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பெரியகடைத் தெரு நயினாமுகம்மது மகன் அபுல்கலாம்(28). இவருக்கும், அவரது மைத்துனருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தேவிபட்டினம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜாகீர்ஹூசேன், அபுல்கலாமை தாக்கி, கொலை செய்து விடுவதாக மிரட்டினாராம்.

   இதுதொடர்பாக அபுல்கலாம் தேவிபட்டினம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் வழக்குப்பதிவு செய்து, ஊராட்சி மன்றத் தலைவர் ஜாகீர்ஹூசேன், ராவுத்தர் நயினா முகம்மது ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai