சுடச்சுட

    

    கீழக்கரையில் இளைஞரை மது பாட்டிலால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.

    கீழக்கரை அலவாக்கரை வாடியைச் சேர்ந்தவர் ஜெயமுருகன். இவர் புதன்கிழமை தனது வீட்டுக்கு மீன்களை வாங்கி, தனது இருசக்கர வாகனத்தில் வைத்துவிட்டு வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள ஒரு பேக்கரியில் டீ குடிக்கச் சென்றுள்ளார்.

    டீ குடித்து விட்டு வெளியே வந்த போது, இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த மீன் பையை காணவில்லை. பின்னர் கீழக்கரை மேலத்தெரு பகுதியில் வசிக்கும் காதர்இப்ராகீம்(45) என்பவரிடம் மீன் பை இருந்ததை தெரிந்து அவரிடம் கேட்ட போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரமடைந்த காதர்இப்ராகீம், மது பாட்டிலால் ஜெயமுருகனை குத்திவிட்டார். இதனால் பலத்த காயமடைந்த ஜெயமுருகன் கீழக்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்த புகாரின் பேரில் கீழக்கரை போலீஸார் வழக்குப்பதிந்து காதர்இப்ராகீமை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai