சுடச்சுட

  

  திருவாடானை தாலுகா விவசாயிகள் குறைந்த மழை அளவில் குதிரைவாலி சாகுபடி செய்யலாம் என வேளாண் அதிகாரி கூறியுள்ளார். 

  திருவாடானையில் வேளாண் விரிவாக்க துணை இயக்க திட்டத்தின் கீழ் 2014-15 ஆம் ஆண்டில் குதிரைவாலி சாகுபடி செய்ய 10 விவசாயிகளுக்கு கோ-2 குதிரைவாலி விதைகளை வேளாண் உதவி இயக்குநர் நாகராஜ் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், தாலுகா முழுவதும் பரவலான மழை பெய்து வருகிறது. இருப்பினும் தற்போது போதுமான மழை இல்லாமல் இருப்பதால் வறட்சியான காலத்திலும் நெல் சாகுபடி பரப்பளவில் குறைந்தது 10 சதவீதம் குதிரைவாலி சிறுதானிய பயிரை சாகுபடி செய்தால் குறைந்த பட்ச வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. இப்பகுதி மானாவாரியில் குதிரைவாலி சாகுபடி செலவு ஏக்கருக்கு ரூ.5000 முதல் ரூ.6000 வரை ஆகும். ஆனால் நிகர வருமானம் 1 ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கிடைக்கும்.

  எனவே விவசாயிகள் குறைந்த தண்ணீர் தேவையுள்ள பயிரினை சாகுபடி செய்து வறட்சியான காலங்களிலும் நிச்சயமான வருமானத்தை பெற்றிட முடியும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai