சுடச்சுட

  

  முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐ.ஜி. அபய்குமார்சிங் புதன்கிழமை பசும்பொன்னில் ஆலோசனை நடத்தினார்.

   முத்துராமலிங்கத் தேவரின் 107-ஆவது ஜயந்தி மற்றும் 52-ஆவது குருபூஜை விழா அக். 28 முதல் 30வரை 3 நாள்கள் நடைபெற உள்ளது.

      இவ்விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினருடன் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தலைமையில் இரண்டுமுறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

   இந்நிலையில் தென்மண்டல ஐ.ஜி. அபாய்குமார்சிங் பசும்பொன் நகருக்கு வருகை தந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ராமநாதபுரம் டி.ஐ.ஜி.ஆனந்தகுமார் சோமானி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், கமுதி உதவி காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவு ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

   தேவர் நினைவிடத்துக்கு வந்த ஐ.ஜி.க்கு நினைவிடப் பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

   இதனைத் தொடர்ந்து அம்மன்பட்டி, மூலக்கரைப்பட்டி, மண்டலமாணிக்கம், கிலாமரத்துப்பட்டி, அபிராமம், வாத்தியேந்தல் ஆகிய பகுதிகளுக்கு நேரிடையாகச் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai