சுடச்சுட

    

    கடலாடி அருகே ஒப்பிலான் பகுதிக்கான மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    நிர்வாகிகள் தேர்வுக் கூட்டத்துக்கு செயலர் சீனி பக்கீர் தலைமை வகித்தார். தாலுகா செயலர் எம்.மயில்வாகனன், தாலுகா உறுப்பினர் செல்வரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீனி சிக்கந்தர் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில், புதிய செயலராக சீனி சிக்கந்தர், கிளை நிர்வாகிகளாக அஜீத், காகாபுரோஷ்கான் ஆகியோர்   தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    கூட்டத்தில், செயல்படாத நிலையில் உள்ள காவிரி கூட்டு குடிநீர் திட்டம், நரிப்பையூர் குடிநீர் திட்டம் ஆகியவற்றை உடனடியாக செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai