சுடச்சுட

  

  மீனவர் குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

  By DN  |   Published on : 24th October 2014 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமேசுவரம் ரோட்டரி சங்கம் சார்பில் மீனவர் குழந்தைகளுக்கு இலவச எழுது பொருள், விளையாட்டு உபகரண பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  பாம்பன், தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த மீனவர் குழந்தைகளுக்கு விளையாட்டு திறனை ஊக்கப்படுத்தும் வகையில் ராமேசுவரம் ரோட்டரிசங்கம் சார்பில் இலவச எழுது பொருள் மற்றும் விளையாட்டு பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி தங்கச்சிமடம் பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ராமேசுவரம் ரோட்டரி சங்கத் தலைவர் பொறியாளர் முருகன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் ரோட்டரி சங்கத்தின் பட்டயத் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி  மீனவ குழந்தைகளுக்கு  எழுது பொருள், நோட் மற்றும் கேரம்போர்டு, செஸ் போர்டு, டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டு பொருள் உபகரணங்களை வழங்கி கல்வித்திறனையும், விளையாட்டுதிறனையும் குறித்து மீனவ குழந்தைகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

  இந்நிகழ்ச்சியில் ராமேசுவரம் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் வழக்குரைஞர் சரவணன், ராமநாதபுரம் ரோட்டரி சங்க உறுப்பினர் கண்ணன்பாபு,  தங்கச்சிமடம் பகுதி மீனவ மகளிர்அணி தலைவி இருதயமேரி, தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த பேடு தனியார் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் பாம்பன், தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மீனவ சங்க தலைவர்கள், மீனவ குழந்தைகள், மீனவ பெண்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai