சுடச்சுட

  

  முதுகுளத்தூர் பகுதியில் தொடர்மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு பெண் குழந்தைகள் காயம்  அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் முதுகுளத்தூர் அருகே யாதவர் வாகைக்குளத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ்(50)என்பவருடைய ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததால் பொருள்கள்  சேதம் அடைந்ததாக முதுகுளத்தூர் வட்டாட்சியர் தாசில்தார் எஸ்.ராமமூர்த்தியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

  அதே போல் வெங்கலகுறிச்சியைச் சேர்ந்த நீலமேகம்(49) என்பவரின் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில்  இடிபாடுகளில் சிக்கி திவ்யஸ்ரீ(7), ஜனனி ப்ரியா(4) ஆகிய இரண்டு குழந்தைகளும் காயம் அடைந்த நிலையில் முதுகுளத்தூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு னுமதிக்கப்பட்டனர். சேதம் அடைந்த வீடுகளை வட்டாட்சியர்  எஸ்.ராமமூர்த்தி பார்வையிட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai