சுடச்சுட

    

    483 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

    By DN  |   Published on : 24th October 2014 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 483 அங்கன்வாடிப் பணியாளர்கள் விரைவில் நியமிக்கப்பட இருப்பதாகவும், தகுதி உடையவர்கள் வரும் நவ.5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறும் ஆட்சியர் க.நந்தகுமார் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் மூலமாக கேட்டுக் கொண்டுள்ளார்.

     இதுகுறித்த செய்திக்குறிப்பு:

    ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் காலியாகவுள்ள 258 அங்கன்வாடிப் பணியாளர் பணியிடங்களுக்கும், 209 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கும், 16 குறு அங்கன்வாடிப் பணியிடங்களுக்கும் தகுதியின் அடிப்படையில் நேர்முகத்தேர்வு நடத்தி, இன சுழற்சி முறையில் நியமனம் செய்யத் தகுதியுள்ள பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெறப்பட்டு வருகின்றன.

    காலியாகவுள்ள பணியிடங்கள் பற்றிய விவரங்கள்(பணியிடங்களின் எண்ணிக்கை அடைப்புக்குறிக்குள்)

    மண்டபம்: அங்கன்வாடிப்பணியாளர்கள்(27), குறு அங்கன்வாடிப் பணியாளர்கள்(1), உதவியாளர்கள்(23), மொத்தம்(51). ஆர்.எஸ்.மங்கலம்: அங்கன்வாடிப் பணியாளர்கள்(35), குறு அங்கன்வாடிப் பணியாளர்கள்(1), உதவியாளர்கள்(20), மொத்தம்(56).

    திருவாடானை: அங்கன்வாடிப்பணியாளர்கள்(33), குறு அங்கன்வாடிப் பணியாளர்கள்(1), உதவியாளர்கள்(20), மொத்தம்(54). முதுகுளத்தூர்:அங்கன்வாடிப்பணியாளர்கள்(17), உதவியாளர்கள்(18), மொத்தம்(35).

    கமுதி: அங்கன்வாடிப் பணியாளர்கள்(22),  குறு அங்கன்வாடிப் பணியாளர்கள்(3), உதவியாளர்கள்(24), மொத்தம்(49). கடலாடி: அங்கன்வாடிப் பணியாளர்கள்(23),  குறு அங்கன்வாடிப் பணியாளர்கள்(9), உதவியாளர்கள்(18), மொத்தம்(50). பரமக்குடி: அங்கன்வாடிப் பணியாளர்கள்(29), உதவியாளர்கள்(23), மொத்தம்(52).

    போகலூர்: அங்கன்வாடிப் பணியாளர்கள்(19), உதவியாளர்கள்(10), மொத்தம்(29).

    நயினார்கோவில்: அங்கன்வாடிப் பணியாளர்கள்(15), உதவியாளர்கள்(11),மொத்தம்(26). திருப்புல்லாணி: அங்கன்வாடிப் பணியாளர்கள்(21), உதவியாளர்கள்(26), மொத்தம்(47). ராமநாதபுரம்: அங்கன்வாடிப் பணியாளர்கள்(17), குறு அங்கன்வாடிப் பணியாளர்கள்(1), உதவியாளர்கள்(16), மொத்தம்(34).

        அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் குறு அங்கன்வாடிப் பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், கடந்த 1.7.2014 அன்று 25 முதல் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

    விதவை மற்றும் ஆதரவற்றோர் 40வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்கலாம். அங்கன்வாடி உதவியாளரைப் பொறுத்தவரை விண்ணப்பிக்கும் நபர்கள் தமிழில் எழுதப்படிக்க தெரிந்தவராகவும்,1.7.2014 அன்று 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். விதவை மற்றும் ஆதரவற்றோர் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்கலாம்.

    விண்ணப்பதாரர் காலியாகவுள்ள மையம் உள்ள ஊரில் வசிப்பவராகவோ அல்லது 3 கி.மீ.தொலைவிற்குள் வசிப்பவராகவோ இருக்க வேண்டும். காலியாக உள்ள இருக்கும் ஊர் மற்றும் 3 கி.மீ.தொலைவிற்குள் வசிப்பவர்களிடம் இருந்து விண்ணப்பம் பெறப்படாமல் இருக்கும் பட்சத்தில் அவ்வூராட்சியை ஒட்டி 10 கி.மீ.க்கு மிகாமல் உள்ள ஊரில் வசிக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்.

       காலியிட மையங்களின் விவரம் மற்றும் இனசுழற்சி முறையிலான இட ஒதுக்கீட்டின்படி விண்ணப்பம் செய்ய வேண்டிய இன வாரியான விவரங்கள் மற்றும் மாதிரி விண்ணப்ப படிவம் ராமநாதபுரம் மாவட்ட இணைய தளத்தில்  ஜ்ஜ்ஜ்.ழ்ஹம்ய்ஹக்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய்ண்ஸ்ரீக்ள்:ட்ற்ம்ல் வெளியிடப்பட்டுள்ளது. மாதிரி விண்ணப் படிவம் சம்பந்தப்பட்ட குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகம், மாவட்ட திட்ட அலுவலகம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம். மாதிரி விண்ணப்பத்தை மேற்குறிப்பிட்டுள்ள ராமநாதபுரம் மாவட்ட இணைய தளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் கல்விச்சான்று,வயதுச்சான்று, இருப்பிடச் சான்றுக்கான குடும்ப அட்டை,வாக்காளர் அடையாள அட்டை மற்றும் சாதிச்சான்று ஆகியனவற்றின் ஜெராக்ஸ் நகல்களுடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மட்டும் நேரில் வரும் 5.11.2014 ஆம் தேதிக்குள் அரசு வேலைநாட்களில் மட்டும் விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பம் செய்பவர்களுக்கு அன்றைய தினமே நேர்காணல் அழைப்புக்கடிதம் வழங்கப்படும்.

                  நேர்காணலுக்கு வரும் போது அசல் நேர்காணல் அழைப்புக் கடிதத்தினை தவறாது எடுத்து வர வேண்டும். தபால் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படாது. வரும் 5.11.2014 ஆம் தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai