சுடச்சுட

    

    ராமேசுவரம் மீனவர்களுக்கு நவம்பர் 7 வரை காவல் நீட்டிப்பு

    By DN  |   Published on : 25th October 2014 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறையிலிருக்கும் ராமேசுவரம் மீனவர்கள் 8 பேருக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 7-ஆம் தேதி வரை சிறைக் காவலை நீட்டித்து இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.

    ராமேசுவரம் பகுதியிலிருந்து கடந்த மாதம் 29-ஆம் தேதி செல்வராஜ் என்ற முனியராமு என்பவருக்கு சொந்த மான படகிலும், கடந்த 6-ஆம் தேதி மீன் கற்புக்கரசி

    என்பவரின் படகிலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது, நடுக்கடலில் அந்தப் படகுகள் பழுதாகின.

    அப்போது அங்கு ரோந்துவந்த இலங்கை கடற்படையினர், படகிலிருந்த முனியசாமி, கோபு, சங்கர், தீபன், மாரிமுத்து, பூபிள்ளை, எம்.மாரிமுத்து, கணேசன் ஆகிய 8

    மீனவர்களையும் கைது செய்து ஊர்க்காவல்துறை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

    எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாக 8 பேர் மீதும் வழக்குப் பதிந்து, ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் அவர்களை போலீஸார் ஆஜர்படுத்தினர்.

    நீதிபதி உத்தரவின்படி, அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் அந்த மீனவர்களை போலீஸார் மீண்டும் வெள்ளிக்கிழமை காலை

    ஆஜர்படுத்தியபோது, அடுத்த மாதம்( நவம்பர்) 7-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்ததுடன், அதுவரை மீனவர்களின் காவலையும் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    அதையடுத்து அவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai