சுடச்சுட

  

  அக்.30-இல் பசும்பொன் தேவரின் குருபூஜை விழாவுக்காக, தேவர் நினைவிட மண்டப வளாகத்தில் ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.

  கமுதி அருகே சுமார் 3 கி.மீ. தூரத்தில் பசும்பொன் கிராமம் உள்ளது.

  இங்கு பிறந்த முத்துராமலிங்கத் தேவர் சுதந்திர போராட்டத்தில் காங்கிரஸில் இணைந்து, சிறை சென்றார். நேதாஜியின் நெருங்கிய நண்பராக இருந்த அவர், காங்கிரûஸ

  விட்டு நேதாஜி விலகி, அகில இந்திய பார் வர்டு பிளாக் கட்சி துவங்கியபோது அக்கட்சியில் சேர்ந்தார். இறக்கும் வரையிலும் அவர், அக்கட்சியின் தமிழகத் தலைவராக

  இருந்தார்.   ஒரே சமயத்தில் இரு தேர்தல்களிலும் போட்டியிட்டு எம்.பி, எம்.எல்.ஏ. ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். நாடாளுமன்றத்தில் தேவரின் ஆங்கிலப்பேச்சு,

  அனைவரது பாராட்டையும் பெற்றது.

  அரசியலையும், ஆன்மிகத்தையும் தனது இரு கண்களாகப் பாவித்து செயல்பட்டு வந்தார். கடைசி வரையிலும் பிரம்மாச்சாரியாகவே வாழ்ந்தார்.

  சாதி, மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்த தேவர், தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு பல்வேறு உதவிகள் செய்துள்ளார். மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் ஆலய பிரவேசத்துக்கு

  ஏ.வைத்தியநாதஐயருக்கு பெரும் துணையாக இருந்தார். மதுரை-திருநகரில் உள்ள வீட்டில் அவர் 30-10-1962-இல் இறந்தார்.

  அவரது உடல், பசும்பொன்னில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு, வீட்டின் வெளிப்புற வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவ்விடத்தில் நினைவிட

  மண்டபம் உருவாக்கப்பட்டது.

    தேவரின் பிறந்த தேதியும், இறந்த தேதியும் அக்.30 ஆகும். எனவே ஆண்டு தோறும் அக். 30-ல் தேவரின் ஜயந்தி விழாவும், குருபூஜை விழாவும் கொண்டாடப்பட்டு

  வருகிறது.

    தேவரின் ஆன்மிக, அரசியல் வாழ்க்கையை வெளிப்படுத்தும் வகையில் அக்.28-இல் ஆன்மிக விழாவும், 29-இல் அரசியல் விழாவும், 30-இல் குருபூஜை விழாவுமாக 3

  நாள்கள் தேவர் நினைவாலயத்தில் விழா கொண்டாடாடப்பட்டு வருகிறது.   இந்த ஆண்டு 107-வது ஜயந்தி விழாவும், 52-வது குருபூஜை விழாவும் நடைபெறுகிறது. இதற்கான

  ஏற்பாடுகள் பசும்பொன்னில் நடைபெற்று வருகின்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai