சுடச்சுட

  

  அரசு பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற உதவி ஆட்சியர் கலந்துரையாடல்

  By DN  |   Published on : 26th October 2014 04:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பரமக்குடி கே.ஜே.கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான ஆலோசனைகள் மற்றும் கலந்துரையாடல் சனிக்கிழமை நடைபெற்றது.

   இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.ஜெயக்கண்ணு தலைமை வகித்தார். பரமக்குடி மாவட்ட கல்வி அலுவலர் வி.பழனியாண்டி, முதன்மைக் கல்வி

  அலுவலரின் நேர்முக உதவியாளர் ரெங்கநாதன், பள்ளி துணை ஆய்வாளர் லோகமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் எம்.அஜ்மல்கான்

  வரவேற்றார்.

   இக்கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பரமக்குடி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் காலாண்டுத் தேர்வில் முதல் மூன்று

  இடங்களைப் பெற்ற மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இவர்கள் அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான வழிமுறைகளை எடுத்துக்கூறி,

  அனைவரும் ஆண்டு இறுதித்தேர்வை இலக்காகக்கொண்டு படிக்க இப்போதிருந்தே தயாராக வேண்டும் எனவும், அரசு பள்ளி மாணவர்கள் மாவட்டம் மற்றும் மாநில

  அளவில் முதல் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைக்க வேண்டும் எனவும் உதவி ஆட்சியர் சு.சமீரன் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இதனைத் தொடர்ந்து

  மாணவர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

    கலையூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சேதுராமு நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai