சுடச்சுட

    

    அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க ஆசிரியர்களுக்கு வேண்டுகோள்

    By DN  |   Published on : 26th October 2014 04:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடி ஸ்ரீ கற்பக விநாயகர் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆசிரியர்கள் அறிவுசார்

    சமுதாயத்தை உருவாக்க பாடுபட வேண்டும் என காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகப் பதிவாளர் முனைவர் வி.மாணிக்கவாசகம் வேண்டுகோள் விடுத்தார்.

     கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவுக்கு கல்லூரியின் தலைவர் கே.வி.எஸ்.பாண்டியன் தலைமை வகித்தார்.

    துணைத்தலைவர் ஆர்.பூமிநாதன், செயலாளர் ஆர்.முருகானந்தம், பொருளாளர் ஆர்.நவநீதகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் கு.ராஜாராம்

    வரவேற்றார்.

     காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகப் பதிவாளர் வி.மாணிக்கவாசகம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, ஆசிரியர் தகுதி தேர்வு பெற்ற மாணவர்களுக்கு பட்டங்களை

    வழங்கி பேசியது: தற்போது பட்டம் பெறும் மாணவர்கள் கல்வி என்பது ஒரு வாழ்நாள் முயற்சியாகக் கொள்ள வேண்டும். மேலதிக அறிவு மற்றும் அனுபவத்தைப்

    பெறக்கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் தவறாமல் ஈடுபாட்டுடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அறிவைக் காட்டிலும் புனிதமானது எதுவும் இல்லை.

     படிப்பறிவு பெற்று பட்டம் பெற்றவர்கள் மீண்டும் அந்த அறிவை பின்பற்றவில்லை என்றால் படிக்காத கல்வியறிவு இல்லாதவர்களுக்குச் சமமானவர்களே. ஆசிரியர்கள்

    ஒவ்வொருவரும்  சமுதாயத்தில் சிறந்த மாணவர்களை உருவாக்கப் பாடுபடவேண்டும்.

     ஆசிரியர்கள் தங்களின் பணிகளை முழுமையாக நேசிக்க வேண்டும். மாணவர்களிடத்தில் எந்தப் பாடத்தை எடுத்து நடத்தினாலும் எடுக்கும் பாடத்தை முழுமையாக

    தெளிவுடன் நடத்துவதுடன், இன்று இருக்கக்கூடிய எடுத்துக்காட்டுகளுடன் விளக்க வேண்டும்.  கல்வியறிவு மட்டுமின்றி பாடத்துடன் இணைந்த நித்திய ஒழுக்கத்துடன்

    கூடிய அறிவுசார் மாணவச் சமுதாயத்தை உருவாக்க பாடுபட வேண்டும். நம் முந்தைய சமூக ஒழுக்கத்தை பெற்றோர் குழந்தைகளிடம் கூறாததால், மாணவர்களின்

    சீரழிவுக்கு பெற்றோரும் துணை போகின்றனர். ஆதலால் தவறான வழியில் செல்லும் மாணவர்களை கண்டறிந்து அவர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பு ஆசிரியர்

    சமுதாயத்துக்கு உண்டு.

     மாணவர்களை நல்ல திறமையுடனும், உறுதியுடனும், நம்பிக்கையுடனும், தைரியத்துடனும், அன்பு கலந்து மரியாதையுடனும், பொது அறிவு நிறைந்தவர்களாகவும்

    உருவாக்குவதே ஒவ்வொரு ஆசிரியரின் கடைமையாகும். எதிர்கால சமுதாயத்தை சிறந்ததாக உருவாக்க அனைவரும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என அவர்

    பேசினார்.

     விழாவில் கல்லூரியின் நிர்வாக இயக்குநர்கள், பேராசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai