சுடச்சுட

  

  கமுதி கலாவிருத்தி மேனிலைப்பள்ளி புதிய கட்டடம் திறப்பு விழா

  By DN  |   Published on : 26th October 2014 04:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கமுதியில் தனது தொகுதி மேம்பாட்டு வளர்ச்சித்திட்ட நிதியில் கட்டப்பட்ட கலாவிருத்தி மேனிலைப்பள்ளி புதிய கட்டடத்தை, சனிக்கிழமை

  மாநிலங்களவை உறுப்பினர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் திறந்து வைத்தார்.   

    விழாவிற்கு சென்னை-கமு முஸ்லிம் பொது நலச்சபை தலைவர், ஓúஸான் இ.எம்.சாகுல் ஹமீது தலைமையும், துணைத்லைவர் கே.பி.எம்.லியாக்கத்தலி முன்னிலையும்

  வகித்தனர். பள்ளித் தாளாளர் டி.எம்.அசன் இப்ராகிம் வரவேற்றார். பள்ளி புதிய கட்டடத்தை மத்திய முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுதர்சன

  நாச்சியப்பன் திறந்து வைத்து பேசியது:

    கடந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் சிறுபான்மையினர் மற்றும் மகளிர் கல்வி வளர்ச்சிக்காக அதிக நிதி ஒதுக்கீடும், சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டன.

  இதனால் மாணவ,மாணவிகளின் கல்வி முன்னேறறம் சிறப்பாக இருந்தது. தகவல் அறியும் சட்டத்தை முந்தைய அரசு அமல்படுத்தியதில் பொது மக்கள் அதிகம் பயன்

  அடைந்துள்ளனர் என்றார்.

    விழாவில் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பேசியது:  கிராமங்களில் பிறந்தவர்கள்தான் பெரும் அறிஞர்களாக, கல்வியாளர்களாக உருவாகி உள்ளனர். எனவே கமுதியில்

  பயிலும் மாணவ, மாணவிகளும் பல்கலைகழக துணைவேந்தர்களாகவும், உயர் அதிகாரிகளாகவும் உருவாக வேண்டும் என்றார்.

    விழாவில் கமுதி ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் பி.கே.கிருஷ்ணன், பேரூராட்சித் தலைவர் எஸ்.கே.சி.ரமேஷ் பாபு, மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.ரவிச்சந்திர

  ராமவன்னி, மூக்கையூர் புனித சந்தியாகப்பர் தேவாலய பாதிரியார் செ.லூர்துராஜ், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் ஆர்.செல்லமுத்து, கமுதி பெரிய பள்ளிவாசல் 

  டிரஸ்டி ஏ.சாகுல் கமீது உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai