சுடச்சுட

  

  தொழிலாளர் நலத்திட்டங்கள்தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது: அமைச்சர்

  By DN  |   Published on : 26th October 2014 04:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத வகையில் தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு தமிழகம்

  முதன்மை மாநிலமாகத் திகழ்வதாக தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.எஸ்.சுந்தரராஜ் சனிக்கிழமை தெரிவித்தார்.

   ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் மேலும்

  பேசியது:

     தொழில்களின் வளர்ச்சியே மாநிலத்தின் வளர்ச்சியாகும். எனவே தமிழக அரசு தொழில்துறைக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை பனைமரத்தைப் பயன்படுத்தி தொழில் செய்வோர், உப்பு தயாரிக்கும் தொழில் மற்றும் கட்டடத் தொழில் செய்வோரே

  அதிகமாக உள்ளனர்.

         நெசவாளர்கள், பொற்கொல்லர்கள், சாலையோர வணிகர்கள் என உடல் உழைப்புத் தொழிலாளர்களுக்கு என 17 நல வாரியங்களை தமிழக அரசு செயல்படுத்தி

  வருகிறது. கடந்த 1997 ஆம் ஆண்டு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் ஜெயலலிதாவால் தோற்றுவிக்கப்பட்டு இன்று வரை பல்வேறு நலத்திட்ட உதவிகள்

  அத்தொழிலாளர்களுக்காக தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

      தொழிலாளரின் இயற்கை மரணத்துக்கு ரூ.15 ஆயிரம், ஈமச்சடங்குகளை செய்ய ரூ.2000, விபத்து மரணமாக இருந்தால் ரூ.ஒரு லட்சம், திருமணம், கல்வி

  உதவித்தொகை என அனைத்து நிதியுதவிகளும் வங்கிகளில் நேரடியாக அவர்களது வங்கிக்கணக்கிலேயே வரவு வைக்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில்

  தொழிலாளர்கள் நலனுக்கென பரமக்குடியிலும், ராமநாதபுரத்திலும் தொழிலாளர் நல மருத்துவமனை அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில்

  89521 உடல் உழைப்புத் தொழிலாளர்கள் இருந்து வருகின்றனர்.

    இவர்களுக்காக இந்நிதியாண்டில் மட்டும் ஜூன் மாதம் 11 ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 14 ஆம் தேதி வரை 25,257 பேருக்கு மொத்தம் ரூ.5.43கோடி மதிப்பிலான

  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    தற்போது நடந்து வரும் விழாவில் 972 பேருக்கு .19லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் பேசினார்.

   விழாவுக்கு மக்களவை உறுப்பினர் அ.அன்வர்ராஜா, மாவட்ட வருவாய் அதிகாரி சோ.விஸ்வநாதன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் மு.சுந்தரபாண்டியன் ஆகியோர்

  முன்னிலை வகித்தனர். மாவட்ட தொழிலாளர் நல அலுவலர் பாலுச்சாமி வரவேற்றார்.

    விழாவில் நகர்மன்ற தலைவர் எஸ்.சந்தானலெட்சுமி, துணைத் தலைவர் கவிதா,ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சாந்தி, அண்ணா தொழிற்சங்க பொருளாளர்

  நாகராஜன், பட்டினம் காத்தான் ஊராட்சித் தலைவர் எம்.சித்ராமருது ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொழிலாளர் நல ஆய்வாளர் துரை நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai