Enable Javscript for better performance
நகரத்தார்குறிச்சியில் \\\"அம்மா\\\' திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    நகரத்தார்குறிச்சியில் "அம்மா' திட்ட முகாம்

    By DN  |   Published on : 26th October 2014 04:43 AM  |   அ+அ அ-   |    |  

    கமுதி அருகே நகரத்தார்குறிச்சியில் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.    

     மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் உத்தரவில், பரமக்குடி கோட்டாட்சியர் எஸ்.சமிரன் மேற்பார்வையில், அபிராமம் வருவாய் பிர்க்காவைச் சேர்ந்த நகரத்தார்குறிச்சியில்

    அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

     முகாமிற்கு சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் விஜயா தலைமையும், தாலுகா வழங்கல் அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலையும் வகித்தனர்,.  

    முகாமில் வருவாய் ஆய்வாளர் மணிகண்டன், கிராம நிர்வாக அலுவலர் செந்தில் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் பங்கேற்றனர்.

      பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, தனி வட்டாட்சியரிடம் கிராம மக்கள் பலர் கொடுத்தனர்.

     இம்மனுக்கள் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டன. அதில் தகுதியுடைய 2 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டது. பட்டா மாறுதல், ரேஷ்ன் கார்டுகளில் திருத்தம்

    குறித்து உத்தரவுகளை தனி வட்டாட்சியர் வழங்கினார்.

    kattana sevai