சுடச்சுட

    

    வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர் வாய்க்கால் தண்ணீரில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

     திருவாடானை தாலுகா தொண்டி அருகே மேலஅரும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனீஸ்வரன் (25). இவர் வாய் பேச முடியாதவர். இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய்

    வருமாம். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை முனீஸ்வரன் ஆடு மேய்க்கச் சென்றார்.

    அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அருகில் உள்ள வாய்க்கால் தண்ணீரில் தவறி விழுந்து விட்டாராம். இதனால் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

       ஆடு மேய்க்கச் சென்ற முனீஸ்வரன் வெகு நேரம் ஆகியும் திரும்பாததால் அவரது தந்தை பாண்டி வயலுக்குச் சென்று பாரத்தபோது அவர் நீரில் மூழ்கி இறந்திருப்பது

    தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த தொண்டி காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிந்து விசாரித்து

    வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai