சுடச்சுட

  

  மாநிலம் முழுவதும் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக் கோரி 100 நாள் நடைபயணம் மேற்கொண்டுள்ள இளைஞர்களுக்கு சனிக்கிழமை பரமக்குடியில்

  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

   இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு தமிழ் தேசிய இயக்க மாவட்ட செயலாளர் சி.பசுமலை தலைமை வகித்தார்.

   இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் செயலாளர் என்.எஸ். பெருமாள், ஒன்றியச் செயலாளர் கே. சுப்பிரமணியன், வைகை பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் மு.

  மதுரைவீரன், காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ஒய். ரபிக்அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

        பொதுநல ஆர்வலர் சை. செüந்திரபாண்டியன் வரவேற்றார்.

   சமுதாயத்தில் மது போதையால் ஏற்படும் பல்வேறு பிரச்னைகள், சிறுவர்கள் முதல் முதியவர் வரை மது போதைக்கு அடிமையாகி தங்கள் வாழ்வையும், தன்னையும்

  மாய்த்துக்கொள்ளும் பல்வேறு சம்பவங்கள் குறித்து விளக்கிப் பேசினர்.

     தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், இதற்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகள் இணைந்து போராட முன்வரவேண்டும் எனக் கோரி 100 நாள்

  நடைபயணம் கன்னியாகுமரியில் துவங்கியது.

    32 மாவட்டங்களை கடந்து புதுச்சேரி வழியாக சென்னையை சென்றடைய உள்ளதாக அந்த இளைஞர் அமைப்பினர் தெரிவித்தனர்.

   பரமக்குடி ஐந்துமுனை சந்திப்பில் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai