சுடச்சுட

  

  ராமேசுவரம்: 5 நாள்களுக்குப்பின் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்

  By DN  |   Published on : 26th October 2014 04:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புயல், மழையால் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமலிருந்த ராமேசுவரம், பாம்பன் பகுதி மீனவர்கள் 5 நாள்களுக்குப்பிறகு சனிக்கிழமை மீன் பிடிக்கச் சென்றனர்.

     வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதையொட்டி தமிழக கடலோரப்பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் ராமேசுவரம், பாம்பன்

  பகுதி மீனவர்கள் கடந்த அக்டோபர் 20ஆம் தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

     இந்நிலையில் கடலில் காற்றின் வேகம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.  இதனால்  மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அதனைத்

  தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு மீன்பிடி சாதனங்களான ஐஸ் பாக்ஸ், டீசல், மீன்பிடி வலைகள், மீன்களை பாதுகாப்பாக வைப்பதற்கு ஐஸ் கட்டி உள்ளிட்ட பொருள்களை

  தயார் படுத்தி படகுகளில் சேகரித்து வைத்திருந்தனர். இதைத்தொடர்ந்து சனிக்கிழமை  அதிகாலை மீன்பிடி அனுமதி சீட்டு பெற்றுக் கொண்டு ராமேசுவரம், பாம்பன்

  பகுதிகளிருந்து 700க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai