சுடச்சுட

  

  அகில இந்திய கராத்தே போட்டி: சாதனை படைத்த பரமக்குடி மாணவர்களுக்கு அமைச்சர் பாராட்டு

  By DN  |   Published on : 27th October 2014 04:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பரமக்குடி கராத்தே மாணவர்கள் அகில இந்திய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றிபெற்ற வீரர்களை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் ஞாயிற்றுக்கிழமை பாராட்டி

  நினைவுப் பரிசு வழங்கினார்.

   சென்னை கீழ்ப்பாக்கம் ஜே.ஜே. உள்விளையாட்டு அரங்கத்தில் கொபுகான் சித்தோரியூ கராத்தே சங்கத்தின் 13-வது  அகில இந்திய கராத்தே போட்டி நடைபெற்றது.

  இப்போட்டியில் தமிழக அணி சார்பில் ராமநாதபுரம் மாவட்ட கராத்தே சங்க தலைமை பயிற்சியாளர் வி.முத்துக்கிருஷ்ணன் தலைமையில் பரமக்குடியைச் சேர்ந்த 12

  மாணவர்கள் பங்கேற்றனர்.

   இதில் டான்பாஸ்கோ மெட்ரிக் பள்ளி மாணவன் எம்.யுவசக்தி 12 வயது பிரிவில் கட்டா, குமித்தேசண்டை ஆகிய இருபோட்டிகளிலும் தங்கம் வென்றார். அதே பள்ளி

  மாணவர்கள் 14 வயது பிரிவில் டி.கிஷோர் கட்டா போட்டியில் வெள்ளி பதக்கமும், டி.சுகன்ஸ்ரீதத் கட்டா, குமித்தே போட்டிகளில் வெண்கலப் பதக்கமும், எச்.அப்துல்ஹமீது

  கட்டா போட்டியில் வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளனர்.

   ஜவ்வாது புலவர் மெட்ரிக் பள்ளி மாணவன் எம்.அல்முசபீர்ரகுமான் 9-வயது பிரிவில்

  வெள்ளி பதக்கமும், அலங்காரமாதா உயர்நிலைப் பள்ளி மாணவன் எம்.பிரபாகர் 13 வயது பிரிவில் கட்டாவில் வெண்கலமும் பெற்றுள்ளார்.

   பெண்களுக்கான போட்டியில் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.அக்ஷயா 13 வயது பிரிவில் கட்டாவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

   வெற்றிபெற்ற மாணவர்களையும், பயிற்சியளித்த கராத்தே மாஸ்டரையும் அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் பாராட்டி பேசியது: இம்மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில்

  அகில இந்திய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் தமிழக அணி சார்பில் கலந்துகொண்டு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ள

  மாணவ-மாணவிகளுக்கு பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன்.

  சமூக மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் தற்காப்பு கலையை பெண்குழந்தைகளுக்கு அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டும். இதற்காக கல்லூரிகளில் என்.எஸ்.எஸ்.

  மாணவிகளுக்கு கராத்தே பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. இதனை மாணவிகள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

   காமன்வெல்த் போட்டியில் தமிழக வீரர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ளது போல், இப்பகுதியைச் சேர்ந்த வீரர்களும் அதுபோன்ற போட்டிகளில்

  பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிக்கொணர வேண்டும்.

  தமிழக வீரர்கள் உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தலைமையின் கீழ்

  செயல்படும் தமிழக அரசு உலகத்தரத்தில் விளையாட்டு அரங்குகள் ஏற்படுத்தி பயிற்சியளித்து வருகிறது என அவர் கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai